சற்றுமுன்

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது..

மோடிக்குச் சிக்கல்: சஞ்சீவ் பட்டிற்கு ஆதரவாக ஐ.பி.எஸ் அதிகாரிகள் !

குஜராத் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது..

வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வழக்கு தொடரும் வசதி!

அரபு நாடுகளில் ஒன்றான ஓமனில் வசிக்கும் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், இந்தியா வராமலேயே உச்ச நீதிமன்றம் மற்றும் கேரள நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது..

அதிவேக இணைய தொடர்பு வழங்கும் நகரங்களின் பட்டியல்: தென்கொரியா முதலிடம்

இணைய சேவை வழங்கும் நாடுகளில் இயங்கும் நிறுவனங்கள் எவ்வளவு வேகத்தில் இணைய இணைப்பிணையும் தொடர்பினையும் வழங்குகிறார்கள் என பண்டோ நெட்வொர்க்ஸ் என்னும் அமைப்பு ஆய்வு செய்தது..

Showing posts with label முத்துப்பேட்டை டுடே. Show all posts
Showing posts with label முத்துப்பேட்டை டுடே. Show all posts

Monday, 10 October 2011

இறைத்தூதரை அவமதித்த ரஹ்மத் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

இறைத்தூதரை கார்டூன் வரைந்து அவமதித்த முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி நிர்வாகிகளை கைது செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

உலக முஸ்லிம்கள் அனைவருடைய உயிரினும் மேலாக மதிக்கும் இறைத்தூதர் முகம்மது (ஸல்) அவர்களது கார்டூன் எனும் கேலிசித்திரம் வரைந்து அதை 2010-2011 ஆம் ஆண்டு கல்வி மலரில் வெளியிட்டுள்ள முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிகுலேசன் ஸ்கூலுக்கு எதிராக மாபெரும் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. 







இந்த முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகுத்தவர் பா. அப்துல் ரஹ்மான் (மாவட்ட தலைவர்). கண்டன உரையை மாநில மேலாண்மை குழு உறுப்பினர் பக்கிர் முகமது அல்தாபி அவர்கள் உரையாற்றினார் நன்றி உரையை அன்சாரி அவர்கள் உரையாற்றினார்.பள்ளி நிர்வாகத்திற்கெதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம்கள் அனைவரும் பாகுபாடின்றி அனைவரும் ஆயிரத்திற்கும் மேலான ஆண்களும் பெண்களும் திரளாக கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.  

இது போன்று சமுதாய பிரச்சனைகளுக்கு பாகுபாடின்றி ஒற்றுமையுடன் செயல்பட்டால் வெற்றி நமதே இன்ஷா அல்லாஹ்...






 

Saturday, 8 October 2011

ரஹ்மத் ஸ்கூல் முற்றுகை போராட்டம்


  • முத்துப்பேட்டை ரஹ்மத் ஸ்கூல் வெளியிட்ட ஆண்டு மலரில் முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை கேலி சித்திரம் வரைந்து இழிவு படுத்தி வெளியிட்டதை கண்டித்தும்.

  • பள்ளி தாளாளர் உள்ளிட்ட பள்ளி நிர்வாகிகளை உடனே கைது செய்ய கோரியும்.

  • வெளியிட்ட புத்தகங்களை திரும்ப பெற கோரியும். 

தமிழ் நாடு தௌஹீத் ஜமாஅத் சார்பில் இன்ஷா அல்லாஹ் அன்று நடைபெற இருப்பதாக அறிவித்துள்ளது. 







 

Tuesday, 27 September 2011

முத்துப்பேட்டை தேர்தல்: SDPI-ன் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் அறிவிப்பு

நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி முத்துப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்காகவும், மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்காகவும்  அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை 26.09.2011 அன்று அறிவிக்கப்பட்டது. பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்காக  SDPI-ன் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் போட்டியிடுகின்றார்.  
வார்டு உறுப்பினர்களுக்கு போட்டியிடுபவர்கள்:
 
வார்டு எண்: 02
N.ரைஹானா
பேகம் 
W/O நிஜாம்
, ஆசாத்நகர்.
வார்டு எண்: 03
A.நிஜாம்
 
S/Oஅப்துல் அஜீஸ், ஆசாத்நகர்.
வார்டு எண்: 08
A.பஜரியா
அம்மாள்
W/O அப்துல்
கரீம்,  மரைக்காயர் தெரு.
வார்டு எண்: 09
M.பாவா
பகுருதீன்
S/O முகமது
யூசுப், பக்கீர் வாடி.     
வார்டு எண்: 13
M.முகைதீன் பிச்சை
S/O முகமது
சேக்தாவுது, திமிலத்தெரு.
வார்டு எண்: 15
M.நெய்னா
முகமது
S/O முகைதீன்
பக்கீர், S.K.M  தெரு.
 
மேலும் SDPI-ன் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் கூறும்போது: இன்ஷா அல்லாஹ் நாளை 28.09.2011 அன்று வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் என்றும், தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் ஆதரிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம் என்றும் கூறினார்.   


செய்தி: நெய்னா பின் அஜீஸ் 
 


மன்னை எக்ஸ்பிரஸ் தொடக்கம், முத்துப்பேட்டை அகல ரயில் பாதை முடக்கம் !

மன்னார்குடியில் இருந்து இன்று இரவு புறப்படும் மன்னை - சென்னை விரைவு ரயிலுக்கான கணினி முன்பதிவு நேற்று தொடங்கியது.

சென்னை செல்வதற்கான முதல் டிக்கெட்டை மன்னார்குடி ரயில்வே முன்பதிவு அலுவலகத்தில் டி.ஆர். பாலு எம்.பி பெற்றுகொண்டார். மன்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். மன்னார்குடியிலிருந்து எழும்பூர் வரை செல்ல முதல் வகுப்பு ஏ சி பயண டிக்கெட் கட்டணம் ரூ.1100, 2ம் வகுப்பு ஏ சி ரூ.604 , 3ம் வகுப்பு ஏ சி ரூ.480 , 2ம் வகுப்பு ஸ்லிப்பர் ரூ.182 என கட்டணம் 
நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 

நேற்று பகல் மணிக்கு முன்பதிவு தொடங்குவதற்கு முன்பாகவே காலை மணி முதல் க்கும் மேற்ப்பட்டோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

இது போன்று நம்ம ஊருக்கும் எக்ஸ்பிரஸ் ரயில் வருமா ?
முத்துப்பேட்டை, அதிரை வழி அகல ரயில் பாதை நமக்கு இனி கானல் நீர் தானோ..!



Saturday, 24 September 2011

முத்துப்பேட்டை: தேர்தல் அலுவலர்கள் நியமனம்

முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் அலுவலராக ஒன்றிய ஆணையர் விஜயகுமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக மேலாளர் சிவகுமார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், தமிழ்ச்செல்வன், ராம மூர்த்தி, கமலராசன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் அலுவலராக திருத்துறைப்பூண்டி உதவி செயற்பொறியாளர் லாரன்ஸ் அன்புநாதன், உதவி தேர்தல் அலுவலர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், உதவி பொறியாளர் வேத நாயகம்.

உதவி தொடக்க கல்வி அலுவலர் சகாய செல்வன் ஆகியோரும், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் அலுவலராக மாவட்ட திட்ட அலுவலர் சுப்பிரமணியன், உதவி தேர்தல் அலுவலர்களாக வேளாண் உதவி இயக்குனர் சிவக்குமார், குடிநீர் வடிகால் துறை உதவி இயக்குனர் சித்தார்த்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முத்துப்பேட்டை பேரூராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் அலுவலராக செயல் அலுவலர் கணேசன், உதவி தேர்தல் அலுவலர்களாக ஆசிரியர் பயிற்றுனர்கள் கருணாமூர்த்தி, சந்திர சேகரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.       





            

Sunday, 11 September 2011

முத்துப்பேட்டையில் அமைதி காக்க வைத்த போலீஸ்

ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் என்றபெயரில் ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஹிந்துத்துவாதிகள் தமிழகத்தில் ஒருவகை பதட்டத்தை ஏற்ப்படுத்தி வருகின்றனர். இவர்கள் வேண்டும் என்றே கலவரம் செய்யும் நோக்கோடு நடத்தும் இந்த ஊர்வலத்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது.

தமிழகத்தில்
எல்லா பகுதிகளிலும் முடிந்துவிட்ட இந்த விநாயகர் ஊர்வலம் முத்துப்பேட்டையில் மட்டும் கடைசியாக நடைபெறுவது வழக்கம் அது போல் நேற்றும் நடைபெற்றது. கடந்த சில வருடங்களாக எந்த ஒரு பிரச்சனையும் நடைபெறாமல் நடந்த விநாயகர் ஊர்வலம் இந்த வருடமும் அமைதியாகவே நடைபெற்றது. இதற்க்கு முக்கிய காரணம் காவல் துறை, இந்த வருடம் பாதுகாப்பிற்காக திருச்சி, கரூர், சென்னை,நாகை, திருவாரூர், திருத்துறைப்பூண்டியிலிருந்து சுமார் 2000 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்த
ஊர்வலத்திற்காக  DIG,SP போன்ற உயர் அதிகாரிகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜாம்புவானோடையிலிருந்து ஆரம்பம் செய்து ஆசாத்நகர், பங்களா வாசல் வழியாக எடுத்து சென்று பாமனியாற்றில் கரைக்கப்படுவது வழக்கம். ஆசாத்நகர், பங்களா வாசல் இடம் வந்தால் போதும் இவர்கள் கோஷமும்,ஆட்டங்களும் அதிமாகும். ஆனால் நேற்று இரண்டு பக்கமும் போலீஸ் நடுவில் ஊர்வலக்காரர்கள் என்று வெகு விரைவாக அவர்களை அனுப்பினர். பங்களா வாசல் வந்தததும் நாங்கள் பழைய வழியாக தான் செல்வோம் (தெற்குத்தெரு)என ஒரு கும்பல் தடுப்பை தகர்க்க முற்ப்பட்டனர். ஆனால் அவர்களை போலீசார் அடித்து விரட்டினர்.

இதுபோன்று
ஒவ்வொரு வருடமும் போலீசிற்கும், பொதுமக்களுக்கும் பங்கம் விளைவிக்கும் இந்த விநாயகர் ஊர்வலம் எப்போது தடைபடும்..?




முத்துப்பேட்டை வழியாக அகல ரயில்பாதை

வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் சகோ அப்துல் ரகுமான் எம்.பி அவர்கள் அனுப்பிய கடித்ததில் அவர் நாடாளுமன்றத்தில் நம் பகுதி அகல ரயில்பாதை அவசியத்தை வலியுறுத்தி பேசியும் அதற்க்கான அமைச்சகத்துக்கு கடிதங்கள் வாயிலாக வலியுறுத்தியும் உள்ளார்.  

அதன் நகலை நமது பார்வைக்கு ....தருகிறோம் 





    அவர் நாடாளுமன்றத்தில் பேசிய உரையின் நகல் :




 





ஹஜ் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு


















Friday, 2 September 2011

அடிப்படை வசதி இல்லாத முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி

முத்துப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் குறைவாகவே உள்ளது.

குடிநீர் வசதி முழுமையாக கிடையாது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ 1லட்சம் திட்ட மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்க்கொள்ளப்பட்டது. அதில் திட்ட நிதி வீனடிக்கப்பட்டதே தவிர குடிநீர் கிடைத்த பாடில்லை. இதனையடுத்து புதிதாக குடிநீர் டேங்க் மற்றும் பைப் லைன்கள் அமைக்கப்பட்டு குடிநீருக்கு ஏற்ப்பாடு செய்யப்பட்டது. நீண்ட காலமாக கட்டுமானப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து கடந்து ஆண்டு தான் நிறைவடைந்தது.

பணிகள் முடிந்தும் குடிநீர் வந்தபாடில்லை, பள்ளி வளாகத்தில் பயனில் இருந்த மூன்று அடிபாம்புகளும் காணமலே போய்விட்டன. இதனால் குடிநீருக்கு வழியின்றி மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறி குடிநீருக்கு அலைய வேண்டியிருக்கிறது. இந்நிலையில் தனியார்
வாகனம்
வாயிலாக பள்ளிக்கு குடிநீர் வசதி ஏற்ப்பாடு செய்யப்பட்டது. தனியார் வாகனமும் சரியாக வருவதில்லை.

இதனால் நிரந்தர குடிநீர் வசதிக்கு வாய்ப்பில்லாத நிலைமை தொடர்கிறது. இது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் ஆசிரியைகள் பலர் பணியாற்றுகின்றனர், அவர்களுக்கு தனிக்
கழிவறை வசதிகள் கிடையாது. மாணவர்களுக்கான பொதுக்கழிவறையும் பராமரிப்பின்றி கிடக்கின்றன. இரவில் பள்ளியை காக்க காவலர் வசதியும் இல்லை. குடிநீர் வசதி மட்டுமின்றி அடிப்படை வசதிகள் கூட கிடையாது என மாணவர்களும், ஆசிரியர்களும் தெரிவித்துள்ளனர்.  










Wednesday, 31 August 2011

முத்துப்பேட்டை பெருநாள் கொண்டாட்ட புகைப்படம்

அல்லாஹ் வின் மாபெரும் கிருபையால் ஈதுல் அல்ஹா எனும் நோன்பு பெருநாள் தொழுகையை முத்துப்பேட்டையிலுள்ள பள்ளிகள் அனைத்திலும் கொண்டாடப்பட்டது. அதில் ஒரு பகுதி போட்டோவை பாருங்கள்.

ஆசாத் நகர் ஜும் ஆ மஸ்ஜித்... 


ரஹ்மத் பள்ளியில்... 











Tuesday, 30 August 2011

முத்துப்பேட்டையில் பெருநாள் கொண்டாட்டம்

தமிழகத்தின் பல பகுதிகளில் பெருநாள் பிறை தென் பட்டதால் முத்துப்பேட்டையில் பெருநாள் கொண்டாட்டம் களைகட்டியுள்ளது நகரின் பல பள்ளிவாயில்களில் தக்பீர் முழக்கம் கேட்டவண்ணம் உள்ளன.
கடை வீதிகளில் மக்கள் வெள்ளத்தினை காணமுடிகிறது கசாப்கடைகளில் மக்கள் முண்டியடித்து கறி வாங்குகிறார்கள் . வழக்கம்போல் அனைத்து பள்ளிகளிலும் பெருநாள் தொழுகைக்கான சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

நாளை இன்ஷா அல்லாஹ்  பெரு
நாளுக்கான தொழுகை  நேரம் மற்றும் இடங்களை ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிக்கப்பட்டுள்ளன.
 
முத்துப்பேட்டை டுடே வாசகர்கள் அனைவருக்கு இனிய நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்...!




Saturday, 27 August 2011

கலெக்டர் பேச்சு: முத்துப்பேட்டை விநாயகர் ஊர்வலப்பாதை

முத்துப்பேட்டையில் விநாயகர் ஊர்வலம் என்றாலே ஒரு விதமான கலக்கம் தான். அடிதடிகள், பஸ் உடைப்பு, கடை எரிப்பு, போலீஸ் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வது தான் நமக்கு ஞாபகம் வரும்.

இது தொடர்பாக திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முத்துப்பேட்டையில் விநாயகர் சிலை கரைப்பு தொடர்பாகவும், ஊர்வலம் அமைதியாக நடத்தப்படுவதர்க்கான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ச. முனியசாமி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.   
 
சிலைகளை ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். சிலை கரைப்பு ஊர்வலம்  ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டும் செல்ல வேண்டும். முத்துப்பேட்டையில் அடுத்த மாதம் செப்டம்பர் 10ம் தேதி ஊர்வலம் நடத்தப்பட உள்ளதாக இந்து அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த ஊர்வலம் மதியம் 3 மணிக்கு ஆரம்பித்து மாலை 6 மணிக்குள் நடத்தி முடித்திட வேண்டும். சிலைகளை ஜாம்புவானோடை தர்கா, ஆசாத் நகர் சந்திப்பு, பழைய பஸ் நிலைய சந்திப்பு, கொய்யா சந்திப்பு, ஏ எம் பங்களா, செம்படவன் காடு ரயில்வே கேட் வழியாகச் சென்று செம்படவன் காடு பாமணி ஆறு கீழ் கரையில் கரைத்திட வேண்டும்.

சிலை கரைத்து முடித்ததும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் காவல் துறையினரால் ஏற்ப்பாடு செய்யப்படும் வாகனங்களில் ஏறி கிழக்கு கடற்க்கரை சாலை பைபாஸ் வழியாகச் செல்ல வேண்டும். எனவே இந்து அமைப்பினர் மாவட்ட நிர்வாகத்திற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று
கலெக்டர் ச. முனியசாமி அறிவுறுத்தினார்.    

கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக எந்த வித பிரச்சனைகள் இல்லாமல் இருந்த முத்துப்பேட்டை நகரம் இனிமேலும் எந்த வித பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்..! 



 

முத்துப்பேட்டையில் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

நாடு முழுவதும் ஊழலுக்கு எதிராக அண்ணா ஹசாரேவின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் வேலையில், முத்துப்பேட்டையில் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவாக மனித உரிமை ஆர்வலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

முன்னதாக முத்துப்பேட்டை ஒன்றிய அலுவலக வாயிலில் உள்ள காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் இருக்க தீர்மானித்தனர். ஆனால் போலீசார் பழைய பஸ் ஸ்டான்ட் பேரூராட்சி அலுவலகம் எதிரே உண்ணா விரதம் நடத்த அனுமதி அளித்தனர். 

வேத மூர்த்தி தலைமை வகித்தார் மாவட்ட இளைஞர் அணி நிர்வாகி விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பலர் இந்த உண்ணாவிரத போராத்தில் கலந்து கொண்டனர்.




முத்துப்பேட்டை அருகே சத்துணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி பேதியால் பரபரப்பு

முத்துப்பேட்டை அருகே தில்லை விளாகம் நடு நிலைப்பள்ளியில் 130 மாணவர்கள் படித்து வருகின்றனர் அதில் 80 மாணவர்கள் தினமும் சத்துணவு சாப்பிட்டு வருகின்றனர்.

நேற்று
மதியம் வழக்கம் போல் அனைவருக்கும் சத்துணவு பரிமாறப்பட்டது. மாணவர்கள் சாப்பிட்டு விட்டு வகுப்புகளுக்கு திரும்பினர். இந்நிலையில் பிற்பகல் 3 மணியளவில் மாணவர்கள் சிலர் திடீரென வாந்தி எடுத்தனர். ஒரு சில மாணவர்கள் மயங்கி விழுந்தனர் இதனால் பள்ளியில் பதட்டம் ஏற்ப்பட்டது.

உடனே பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களுடன் முத்துப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்தனர். பின்னர் அனைவருக்கும் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இச்சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.
 
இது குறித்து பள்ளி ஆசிரியர் கூறுகையில், 3 மணியளவில் மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக வாந்தி எடுத்து மயக்கமாயினர். உடனே தொடக்க கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்தோம். பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர்களை வேன் மற்றும் கார்களில் அரசு ஆசப்த்திரிக்கு அழைத்து வந்தோம். மயக்கத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.       





Thursday, 25 August 2011

மருத்துவ குணமுள்ள கனவாய் மீன்கள் முத்துப்பேட்டை, அதிரை கடற் பகுதிகளில்

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் கனவாய் மீன்கள் சீசன் தொடங்கியுள்ளதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் மீனவர்களின் வலையில் கனவாய் மீன்கள் அதிகம் பிடிபடுகின்றன. கனவாய் மீன்களில் ஆக்டோபஸ்,பேபி சுருட்டி, சி எப் ஆகிய வகைகள் உள்ளன.

இந்த 4 வகை கனவாய் மீன்களும் முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் கடற் பகுதிகளில் அதிகம் பிடிபடுவதால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கனவாய் மீன்கள் வரத்து அதிகம் உள்ளதால் ஏற்றுமதியும் தீவிரமடைந்துள்ளது.

இது பற்றி முத்துப்பேட்டை மீனவர்கள் கூறுகையில்:
இந்த வகை கனவாய் மீன்கள் சாப்பிடுவதற்கு ஆட்டுக்கறி போன்று இருக்கும் மேலும் இது மருத்துவ குணமுடைய மீன்கள். இது குறுப்பிட்ட காலத்தில் மட்டுமே கிடைக்க கூடியது. இதனால் இவை ஜப்பான், அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

இப்போது அக்டோபஸ் ஒரு கிலோ ரூ 60க்கும், பேபி கனவாய் ரூ 40க்கும்,  சுருட்டி ரூ 150க்கும், சி எப் ரூ 200க்கும் விற்கப்படுகிறது. 


Saturday, 20 August 2011

முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் கிளப்பின் இப்தார் விருந்து

துபாய் வாழ் முத்துப்பேட்டை சகோதரர்கள் நேற்று முத்துப்பேட்டை மூன் லைட் கிரிக்கெட் அணி சார்பாக இரண்டாம் ஆண்டு இப்தார் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 




இதில் முத்துப்பேட்டை சகோதரர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்தார் விருந்தில் கலந்து கொண்டு இப்தாரை சிறப்பித்தனர். இந்த இப்தார் விருந்தினால் முத்துப்பேட்டை சகோதரர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைத்தது. 

மாஷா அல்லாஹ்.. இது போன்ற செயல்களை மென் மேலும் செய்ய மூன் லைட் கிரிக்கெட் அணி சகோதரர்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்.

முத்துப்பேட்டையில் இலவச கண் பரிசோதனை

முத்துப்பேட்டையில் ரோட்டரி கிளப், மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் 75வது இலவச கண் பரிசோதனை முகாம் நடை பெற்றது.

புதுப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் 134 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது, இதில் 36 பேர் கண் அறுவை சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.   

முத்துப்பேட்டை அருகே ரவுண்டானா அமைக்க வேண்டும்

முத்துப்பேட்டை அருகே சாலை விபத்தினை தடுக்க  ரவுண்டானா அமைக்க வேண்டும் என  பொது மக்கள் வலியுறுத்தப்பட்டுள்ளது.
 
முத்துப்பேட்டை நகரின் குறுகிய சாலை பயணத்தால் ஏற்ப்படும் பாதிப்பை தவிர்க்க பைபாஸ் சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன்படி பட்டுக்கோட்டை ரோடு செம்படவன் காடு துவங்கி திருத்துரைப்பூண்டி ரோடு ஆலங்காடு வரையிலும் கோவிலூர் வழியாக பைபாஸ் சாலை அமைக்கப்பட்டு பயனில் உள்ளது. 

இந்நிலையில் கோவிலூர் மற்றும் ஆலங்காடு சாலை இணைப்பு முகப்பு பகுதியில்
ரவுண்டானா இல்லாததால் வாகன விபத்து அதிகரித்து பலர் உயிரிழந்து வருகின்றனர். இதையொட்டி கோவிலூர் நால்ரோடு பகுதியில் ரூ80  லட்சம் திட்ட மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்கப்பட்டு வருகிறது. பணிகள் முழுமை பெறாத நிலையில், அமைக்கப்படும் தடுப்புகள் திடமின்றி இருக்கின்றன. இரு சக்கர வாகனம் மோதினால் கூட பெயர்ந்துவிடும் அளவுக்கு தடுப்புகள் அமைந்துள்ளன. தடுப்புகளை அகற்றி விட்டு கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டப்பட வேண்டும்.

மேலும்
முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை சாலை இணைப்பு பகுதி மற்றும் ஆலங்காடு பகுதியில் ரவுண்டானா அவசியம். இப்பகுதியில் இது நாள் வரையிலும் உயிரிழப்புகளும், வாகன விபத்துகளும் அதிகம் ஏற்ப்பட்டுள்ளது. கோவிலூர் போன்று ஆலங்காடு சாலை இணைப்பு மற்றும் முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை சாலை இணைப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்கப்பட்டால் தான் தொடர் விபத்துகளும், உயிரிழப்புக்களையும் தவிர்க்க முடியும்.

எனவே விபத்தை தடுக்க
முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை சாலை இணைப்பு பகுதி மற்றும் ஆலங்காடு சாலை இணைப்பு பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர். 

Friday, 19 August 2011

நோன்பு கஞ்சிக்கு அரிசி தரவில்லை அரசு: திருவாரூரில் போராட்டம்!

ரமளான் நோன்பு கஞ்சி வைக்க அரசு அரிசி வழங்காததைக் கண்டித்து திருவாரூரில் தவ்ஹீத் ஜமாத் அமைப்பு போராட்டம் நடத்தியது. முஸ்லிம்களின் புனித மாதமான ரமளானின், நோன்பு கஞ்சிக்குத்  தமிழக அரசால் ஒவ்வொரு வருடமும்  அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில் இவ்வருடமும் அரசு அரிசி வழங்கியதில், சில பகுதிகளுக்குச் சரிவர அரிசி  வழங்கவில்லை என பரவலான குற்றச்சாட்டு எழுந்தது. அதன் வகையில் திருவாரூரில் சரிவர  அரிசி வழங்கவில்லை என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் நேற்று(வியாழன்)  போராட்டம் நடைபெற்றது.

இதில் திருவாரூருக்கு அரிசி வழங்குவதில் அரசு காட்டும் மெத்தனபோக்கைக் கண்டித்து அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தன் எதிர்ப்பைக் காட்டினர். இப்போராட்டத்தில் மாவட்டம் முழுவதுமிருந்து நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

Wednesday, 17 August 2011

பேஸ்புக்கின் மூலம் துபாயில் வேலை கிடைத்த இஸ்லாமிய வாலிபர்

சென்னையில் வேலை தேடி போன நேரத்தில் ரூம் மெட் ஆக அறிமுகமானவர் தான் இந்த நண்பர். இவர் பெயர் ஸ்டாலின் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சார்ந்தவர் இவர் மல்டிமீடியா துறையில் திறமையானவர்.  

இவருடைய கனவு எல்லாம் துபாய் சென்று சம்பாரிக்க வேண்டும் என்ற ஆசை தான். ஆனால் வருக்கு உதவ சரியான நபர் கிடைக்கவில்லை இவருடைய பழக்க வழக்கம் எல்லாம் முத்துப்பேட்டை சகோதரர்களான முஸ்லிம்களிடம் மட்டுமே . 

இஸ்லாமிய சகோதரர்களை தான்  அதிகம் விரும்புவார் இந்த பழக்க வழக்கத்தினால் எங்களுடைய நடவடிக்கைகள் பேச்சுக்களை கண்காணிப்பார். அவரிடத்தில் இஸ்லாத்தை பற்றி அதிகமாக விவாதிப்போம் இஸ்லாத்தை பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்த அவர் ஒரு நாள் நான் இஸ்லாத்தை ஏற்க விரும்புகிறேன் என்றார். பின்பு அவர் தந்தையுடைய சம்மதத்துடன் இஸ்லாத்தை ஏற்றார் மாஷா அல்லாஹ்.

இஸ்லாத்தை ஏற்ற அவர் தன்னுடைய பெயரை மாலிக்
(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என மாற்றிகொண்டார். மாலிக் எங்களை விட அதிகமாக இபாத்தத்துகளில் ஈடு படுவார். அவரிடம் துபாய் பற்றி கூறும்போதெல்லாம் அவர் இன்ஷா அல்லாஹ் நா கண்டிப்பா அங்க போவேன் என்று சொல்லுவார். 

இந்த வேலையில் சென்னையில் வேலை பார்த்து கொண்டிருந்த அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிநாடு செல்வதற்காக பிரிய ஆரம்பித்தோம். இந்நிலையில் அவரும் இன்னொரு முத்துப்பேட்டை நண்பரும் மட்டுமே  இருந்தனர். 

இவ்வேளையில் பல வருடங்களாக அவர் காலேஜில் படித்த நண்பர் இவரை தேடிக்கொண்டிருந்திருக்கிறார். அவர் துபாயில் மேனேஜராக பனி புரிந்து கொண்டிருப்பவர் இவர் மூலம் பல நண்பர்களுக்கு வேலை வாங்கி கொடுத்திருந்திருக்கிறார். ஆனால் மாலிக்கை மட்டும் கண்டு பிடிக்க முடியவில்லை. மாலிக்குடைய இ மெயில், போன் நம்பரோ எதுவுமே இல்லாத சூழ்நிலையில் கடைசியில் எதார்த்தமாக பேஸ் புக்கில் உலாவி கொண்டிருக்கையில் தான் இவருடைய போட்டோவை பார்த்திருக்கிறார் பின்பு  பேஸ்புக்கில் உள்ள நம்பரை  எடுத்து அவருக்கு போன் போட்டு பேசிருக்கிறார். 

கடைசியில் அவருக்கு போன் இண்டர்வியு மூலம் செலக்ட்  ஆகி 15 நாளில் அவருக்கு விசா வந்து விட்டது அல்ஹம்துலில்லாஹ். இப்பொழுது அவர் அவருடைய இலட்சியத்தை அடைந்து விட்டார். 

இன்ஷா அல்லாஹ் இவருடைய இஸ்லாமிய வாழ்க்கை சிறப்பாக அமைய ஏக இறைவனிடம் பிராத்தியுங்கள்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More